கள்ளரில் இருந்து மறவர் வந்தார்களா?? மறவர்களில் இருந்து கள்ளர் வந்தார்களா?? என்ற குழப்பம் நம் முக்குலத்தோர் சமூக கட்டமைப்பிற்குள் நெடுங்காலமாக நிலவி வருகிறது.
மேலும் வரலாற்று புரிதல் இல்லாத சிலர் கள்ளர்களை ஆதி மறவர் என்றும், வெட்சி மறவர் , மறக்குடி , மயிறு குடி என்றும் தவறாக சித்தரித்து பேசி வருகின்றனர். அதற்கு அவர்களின் அறியாமையே காரணம்.
மறவர் என்ற பெயர் வருவதற்கு முன்பே இங்கு கள்வர் என்ற குடி உருவாகிவிட்டது.
சங்க காலத்திற்கு முற்பட்ட முதல் நூலாக கருதப்படும் #தொல்காப்பியம் தான் இதற்கு ஆதாரம். இவை கிமு 7ம் நூற்றாண்டை சேர்ந்தவை.
( 2600 ஆண்டுகளுக்கு முந்தையது ).
"அணங்கே விலங்கே கள்வர் தம் இறை எனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே" (தொல்.மெ.8)
இதன் பொருள் : தெய்வம் , விலங்கு , கள்வர் , அரசன் இவை நான்கும் ஒருவர் மிகவும் அச்சப்படக் கூடியது.
கள்வர் என்னும் பழங்குடிகளின் வீரமும் காவலும் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடியதாக அன்றைய காலங்களில் இருந்துள்ளது.
இவ்வாறு தொல்காப்பியத்தில் கள்வர் என்ற பெயர் உண்டு. மறவர் என்ற பெயர் கிடையவே கிடையாது. பின் எப்படி தான் மறவரில் இருந்த கள்ளர் வந்தவர்கள் என்று சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை.
சங்க காலத்தில் தான் மறவர் பற்றி குறிப்பு வருகிறது. அதே நேரத்தில் சங்க காலத்தில் கள்ளர்கள் அரசர்களாக ஆட்சி செய்துள்ளனர். கள்வர் கோமான் புல்லி என்ற சிற்றரசன் திருவேங்கடம் பகுதியில் ஆட்சி செய்கிறார். கள்வர் பெருமகன் தென்னவன் என்ற பாண்டிய வேந்தன் மதுரையில் ஆட்சி செய்கிறார்.
தொல்காப்பியர் காலத்தில் கள்வர் என்று அழைக்கப்பட்ட குடியினர், சங்க காலத்தில் அரசர்களாக ஆட்சி செய்துள்ளனர் என்பதை இலக்கியத்தில் ஆதாரமாக உள்ளது.
மேலும் மரபணு ஆய்வின் படியும் கள்ளர்களின் மரபணு தான் இந்தியாவிலேயே பழமையானது என்று உலக அரங்கில் நிறுபிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கள்ளரில் இருந்து தான் இன்றுள்ள தமிழ் சாதிகளே பிரிந்துள்ளது. இதனை நிறுபிக்கும் விதமாக சில குடிகள் கள்ளர் வழி வந்தவர்கள் என குறிக்கப்பட்டுள்ளனர்.
கள்ள வேட்டுவர்
வேட்டுவர் சாதியில் உட்பிரிவுகளில் ஒன்றாக கள்ள வேட்டுவர் இருந்துள்ளதை கவந்தபாடி வேட்டுவர் செப்பேடு கூறுகிறது.
(ஆதாரம் : ஆவணம் இதழ் 2015, p201)
கள்ள இடையர்
இடையர் சமூகத்து உட்பிரிவுகளில் கள்ள இடையர் என்றொரு பிரிவினர் தஞ்சை பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். தங்களை கள்ளர் வழிவந்தவர்கள் என்று அழைத்து கொள்ளும் இவர்களிடம் கள்ளர் சமூகத்து பழக்க வழக்கங்கள் காணப்படுகிறது.
கள்ள மறவர்
கள்ள மறவர் என்ற உட்பிரிவு சாதியினர் தென்தமிழகத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களை ஆங்கிலேயர் ஆவணத்தில் கள்ளர் வழி மறவர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இராஜபாளையத்தில் உள்ள கள்ள மறவன் சாமியை அங்குள்ள மறவர்கள் குலதெய்வமாக வணங்குகிறார்கள். மேலும் கள்ள முதுமறவர் என்று பன்னிரு திருமுறை 27ம் பாடல் சிறப்பித்து கூறுகிறது.
இவ்வாறு பல வேட்டை குடியினர் தங்கள் குலமாக கள்ளர் என்பதை சாசனங்களில் குறித்துள்ளனர். கள்ளரில் இருந்து தான் மறவர்கள் வந்திருப்பார்களே தவிர மறவரில் இருந்து கள்ளர்கள் வந்தவர்கள் என்று சொல்வது வரலாற்று பிழை.
மேற்கண்ட அனைத்து ஆதாரங்களின் படியும் கள்ளர் தான் முக்குலத்தின் மூத்தவன் என்று சொல்வதை காட்டிலும் தமிழினத்தின் மூத்த குடி என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.
M130y என்ற மரபணு அறிக்கையானது கள்ளர்கள் தான் ஆசியாவில் முதல் குடி என்ற உண்மை உலகரங்கில் நிறுபித்துள்ளது.
கல்தோன்றி மண்தோன்ற காலத்தில்
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி என்ற இலக்கிய வரிகள் கள்ளர் சாதியே தவிர வேறு எந்த சாதியையும் குறிக்காது என்பது தான் நிதர்சனமான உண்மை.
முக்குலத்தோர் சமூகத்திற்குள் உட்பிரிவு பிரச்சினை நடக்க காரணம் கள்ளர் குறித்து பிழையான வரலாற்றை தொடர்ச்சியாக சில மடையர்கள் பேசி வருவது தான். இனி சரியான வரலாற்றை ஆதாரத்துடன் பேசுவோம். அது தான் உட்பிரிவு பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளியே வைக்கும்.
மாய கருப்பன்

Post a Comment