பிறமலை கள்ளர்களின் நாட்டமைப்பு நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்டதாக ஒரு பொதுவான கருத்து முன்பு இருந்தது. ஆனால் சமீப காலமாக கிடைத்த பல தொல்லியல் ஆதாரங்கள் இந்த கருத்தை மறுக்கிறது.

பாண்டியர் வேந்தர்களின் காலத்திலேயே கருமாத்தூர் பற்றி குறிப்பு உள்ளது. கிபி 1251ல் ஆட்சிக்கு வந்த முதலாம் சடையவர்மன் சுந்த பாண்டிய தேவரின் 9வது ஆட்சி ஆண்டில் வெளியிட்ட கல்வெட்டில் கருமாத்தூர் பற்றி குறிப்பு உள்ளது.

இந்த கல்வெட்டு விக்கிரமங்கலம் சிவன் கோவிலில் உள்ளது. இந்த கல்வெட்டில், கிழவனெரி என்ற ஊரானது விற்கப்படும் போது, அதன் வட எல்லையாக கருமாத்தூர் பற்று குறிக்கப்பட்டுள்ளது. இதைபோல இராஜேந்திர சோழ தேவர் கல்வெட்டிலும் வாலாந்தூர் பற்றி குறிப்பு உள்ளது.

பிறமலை கள்ளர்களின் எட்டு நாடு என்ற நிலவரையறை நாயக்கர் காலத்தில் பிரிக்கப்பட்டாலும், அவை பாண்டியர் காலத்தில் தென்கல்லக நாடு என்ற நிர்வாக பிரிவிற்குள் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது.

1) சங்க காலத்தில் திடியன் பற்றி குறிப்பு உள்ளது. மலையை மையமாக கொண்டு கள்ளர்களின் நாட்டமைப்பு முன்பு இருந்தது.

2) சமண கல்வெட்டில் குயில்குடி பற்றிய குறிப்புகள் உள்ளது.

3) பாண்டியர் சோழர் காலத்தில் வாலாந்தூர், கருமாத்தூர், ஆனையூர் (திருக்குறுமுள்ளூர்), ஆகிய மூன்று நாடுகள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டில் ஆதாரமாக உள்ளது.

மாய கருப்பன்

Post a Comment

أحدث أقدم