மதுரையில் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சியும் அதன் பின் ஏற்பட்ட பல்வேறு ஆட்சி மாற்றங்கள் கள்ளர் சமூகத்தை பல்வேறு கட்டங்களில் பாதித்தது. சிலர் களவில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அவை நிலையானதாக பிறமலைக்கள்ளர்களில் வாழ்வியலில் இருந்தது இல்லை.
நாயக்கர் ஆட்சியிலும், அதன் பின் வந்த ஆங்கிலேயர் ஆட்சியிலும் கள்ளர் சமூகத்தினர் பற்றி எண்ணற்ற குறிப்புகள் கிடைக்கப்படுகின்றனர்.
அதில் மதுரை மண்டலத்தை மையமாக கொண்டு கள்ளர் சமூகத்தினர் காவல் பணியில் அதிகளவு ஈடுபட்டனர் என்பதற்கு பல்வேறு தரவுகள் உள்ளது..
கிபி 1801 ல் ஆங்கிலேயர் ஆட்சியில் பாளைக்காரர் அந்தஸ்தில் இருந்த குடும்பத்தினர் ஜமீன்தார்களாக மாற்றப்பட்டனர். இத்தகைய ஜமீன்தார்கள் தங்கள் நிலவுடைமையே காக்கும் போருட்டு கள்ளர் நாட்டு மக்களின் உதவியே எதிர்பார்த்து இருந்தனர்.
இதனை உறுதிபடுத்தும் விதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மையநாயக்கனூர் ஐமீன்தார் கனகய நாயக்கர் ஆரியபட்டியே சேர்ந்த பிறமலைக்கள்ளர்கள் இருவருக்கும் கிராமக்காவல் உரிமை வழங்கியுள்ள செய்தி ஒரு செப்பு பட்டயத்தில் இடம்பெற்றுள்ளது.
கிபி 1845 ல் வழங்கப்பட்ட இந்த செப்பேட்டில் ஜமீன்தார் கனகய நாயக்கர் உட்பட 8 நாயக்கர் சமுதாயத்துடன் ஆரியபட்டியே சேர்ந்த மதுரைக்கோட்டை கருத்தவீரத்தேவர் மகன் குமாரத்தேவன் மற்றும் இராசத்தேவன் மகன் சின்ன வீரத்தேவன் ஆகிய இரண்டு பிறமலைக்கள்ளர்கள் கிராமகாவல் பொருப்பை ஏற்க வேண்டும் என்ற செய்தி உள்ளது. இவர்களுக்கு காவல் கூலியாக வீடு ஒன்றுக்கு 3 குறுணி தானியம் கொடுக்க வேண்டும் என்றும் மேலும் இரவில் காவலை மீறி மாடு களவு போனால் 7 பொன்னும், நிலத்தில் மேய்ந்தால் 5 பொன்னும் அபராதமாக கொடுக்க வேண்டும் என்ற தகவலும் இந்த செப்பு பட்டயத்தில் தெளிவாக உள்ளது.
இத்தகைய வலுவான காவல் முறையில் கள்ளர்கள் ஈடுபட்டு இருந்தனர் என்பதை இந்த செப்பு பட்டயம் விளக்குகிறது.
இந்த செப்புப்பட்டயம் திண்டுக்கல் நிலக்கோட்டையில் ஒரு பள்ளர் சமூகத்தவர் வீட்டில் வைத்திருந்தனர். அதனை ஆய்வாளர் கு.சேதுராமன் வெளிக்கொண்டு வந்தார்..
பிறமலைக்கள்ளர்களின் வாழ்வியல் காவலை மையப்படுத்தி இருந்தது என்பதை இந்த செப்பு பட்டயம் தெளிவாக சொல்கிறது.
மாய கருப்பன்


إرسال تعليق